Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 635)

Paththati 18 - முக்தா பத்ததி

பாதாவநி ஸ்புடமயூக மதுப்ரவாஹா முக்தா பரிஸ்புரதி மௌக்திக பத்ததி: தே ரூடஸ்ய ரங்கபதி பாதஸரோஜ மத்யே ரேகாத்மந: ஸுரதரோ: இவ புஷ்ப பங்க்தி:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடியின் நடுவில் உள்ள மெல்லிய கோடு (ரேகை) கற்பக மரம் போன்று உள்ளது. தாமரைமலர் போன்ற சிவந்த அந்தத் திருவடியில் காணப்படும் கற்பக மரத்தின் மலர்கள் போன்று, உனது முத்துக்கள் உள்ளன. இவற்றிலிருந்து பெருகும் ஒளி வெள்ளமானது மிகவும் அழகாகவும், தேன் போன்று இனிமையாகவும் உள்ளன.