Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 634)
Paththati 18 - முக்தா பத்ததி
ராமாநுவ்ருத்தி ஜடிலே பரதஸ்ய மௌளௌ ரங்காதிராஜ பதபங்கஜ ரக்ஷிணி த்வம் ஏகாதிபத்ரித ஜகத் த்ரிதயா த்விதீயம் முக்தாம்சுபி: க்ருதவநீ நவம் ஆதபத்ரம்
ஸ்ரீரங்கராஜனின் தாமரை போன்ற திருவடிகளைக் காப்பவளே! மூன்று உலகங்கள் முழுவதும் ஒரே குடையின் கீழ் இருந்தன. இராமனைப் போன்றே ஜடை தரித்த பரதனின் தலையில், உனது முத்துக்களின் ஒளி மூலமாக, புதிதான இரண்டாவதாக ஒரு குடையை நீ அமைத்தாய்.
உலகம் முழுவதும் பரதனால் “பாதுகையின் ஸாம்ராஜ்யம்” என்ற குடையின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனைக் கண்டு பாதுகைக்குப் பொறுக்கவில்லை. தன்னைக் காட்டிலும் பரதனுக்கு அதிகமான பெருமை உண்டாக வேண்டும் என்று எண்ணி, தனது முத்துக்களின் ஒளி மூலமாகவே பரதனுக்கு வெண்கொற்றக் குடையை அமைத்தாள்.