Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 633)

Paththati 18 - முக்தா பத்ததி

வைகுண்ட பாத நக வாஸநயேவ நித்யம் பாதாவநி ப்ரஸுவதே தவ மௌக்திகாநி அச்சிந்ந தாபசமநாய ஸமாச்ரிதாநாம் ஆலோக மண்டல மிஷாத் அம்ருத ப்ரவாஹம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் இருந்து கங்கை உண்டானது. அந்தத் திருவடிகளின் நகங்களுடன் உனக்கும் உன்னில் காணப்படும் முத்துக்களுக்கும் பழக்கம் உண்டானது. இதனால் நீ செய்வது என்ன - ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை அடைபவர்களுடைய, யாராலும் விலக்க இயலாமல் உள்ள வேதனைகளை தீர்ப்பதற்காக, உனது முத்துக்களின் ஒளியை அமிர்த வெள்ளம் போன்று எங்கும் பரவச் செய்கிறாய் போலும்.