Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 632)
Paththati 18 - முக்தா பத்ததி
த்ரயந்த ஹர்ம்யதல வர்ண ஸுதாயிதேந ஜ்யோத்ஸ்நா விகல்பித ருசா மணிபாதுகே த்வம் முக்தாமயீ முரபித் அங்க்ரி ஸரோஜ பாஜாம் வர்ணேந தே சமயஸீவ ஸதாம் அவர்ணம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உனது முத்துக்களின் ஒளி காரணமாக வேதாந்தங்கள் என்னும் உப்பரிகைகளுக்கு வெள்ளை அடிக்கும் சுண்ணாம்பு போன்று உள்ளாய். உன்னை வணங்குபவர்கள் மீது இந்த நிறமானது, நிலவின் ஒளி போல் பரவுகிறது. இப்படியாக ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் பணிகின்றவர்களுடைய தோஷங்களை நீ விலக்குகிறாய் போலும்.