Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 631)
Paththati 18 - முக்தா பத்ததி
பாத அர்ப்பணேந பவதீம் ப்ரதிபத்யமாநே ஸ்ரீரங்க சந்த்ரமஸி ஸம்ப்ருத மௌக்திக ஸ்ரீ: அங்கீகரோஷி சரணாவநி காந்திம் அக்ர்யாம் உத்பித்யமாந குமுதேவ குமத்வதீ த்வம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கத்தின் சந்த்ரனாகிய ஸ்ரீரங்கராஜன், தனது திருவடிகளில் உன்னைச் சேர்த்துக் கொள்ளும்போது, அவனது திருவடிகளின் ஒளியானது சந்த்ரனின் ஒளி போன்று உன் மீது விழுகிறது. அப்போது உன்னில் பதிக்கப்பட்ட முத்துக்கள் அனைத்தும், ஆம்பல் மலர் போன்று மலர்கின்றன. இதனைக் காணும்போது நீ ஆம்பல் தடாகம் போன்ற அழகை அடைகிறாய்.