Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 630)
Paththati 18 - முக்தா பத்ததி
லக்ஷ்மீ விஹார ரஸிகேந பதாவநி த்வம் ரக்ஷாவிதௌ பகவதா ஜகதோ நியுக்தா ஸத்த்வம் ததர்ஹம் இவ தர்சயஸி ப்ரபூதம் முக்தா மயூக நிகரேண விஸ்ருத்வரேண
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தான் ஸ்ரீரங்கநாச்சியாருடன் விளையாடும் பொருட்டு, ஸ்ரீரங்கநாதன் இந்த உலகைக் காப்பாற்றும் பொறுப்பை உன்னிடம் அளித்து, உன்னை நியமித்தான். அந்தச் செயலுக்கு ஏற்ற தகுதியான அதிகமான ஸத்வ குணம் உனக்கு உள்ளது என்பதை, எங்கும் பரவி நிற்கும் உனது முத்துக்களின் ஒளி மூலமாக உணர்த்துகிறாய் போலும்.