Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 629)
Paththati 18 - முக்தா பத்ததி
விக்ரம்யமாணம் அபவத் க்ஷணம் அந்தரிக்ஷம் மாயாவிநா பகவதா மணிபாதரக்ஷே வ்யோமாபகா விபுல புத்புத தர்சநீயை: முக்தாபலை: தவ சுபை: புநருக்ததாரம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! வியக்கத்தக்க செயல்கள் செய்யும் ஸ்ரீரங்கநாதனால் முன்பு இந்த உலகம் அளக்கப்பட்டபோது, அவன் தனது திருவடியை மேல் நோக்கி உயர்த்தினான். அப்போது உனது முத்துக்கள் ஆகாயத்தில் காணப்படும் கங்கையின் நீர்க்குமிழிகள் போன்று ப்ரகாசித்தன. அந்த ஒரு நேரத்தில், விண்ணில் இருந்த நக்ஷத்ரங்கள், உன்னுடைய முத்துக்களுடன் சேர்ந்து கொண்டு, இருமடங்காக உள்ள நக்ஷத்ரக்கூட்டம் போன்று தோன்றின.