Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 628)

Paththati 18 - முக்தா பத்ததி

அவைமி ரங்கேச்வர பாதரக்ஷே முக்தா பலாநி த்வயி நிஸ்துலாநி தேநைவ கல்பாந்தர தாரகாணாம் உப்தாநி பீஜாநி ஜகத் விதாத்ரா

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்ட வெண்மையான வட்டமான முத்துக்கள் காண்பதற்கு எப்படி உள்ளன என்றால் – அடுத்து வர உள்ள கல்பங்களில் தோன்றவுள்ள நக்ஷத்ரங்களுக்கு, ஸ்ரீரங்கநாதனால் விதைக்கப்பட்ட விதைகள் என்றே தோன்றுகின்றன.