Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 627)

Paththati 18 - முக்தா பத்ததி

ரங்கே சயாநஸ்ய பதாவநி த்வாம் லாவண்யஸிந்தோ: ஸவிதே நிஷண்ணாம் பரிஸ்புரத் மௌக்திக ஜால த்ருச்யாம் ப்ரஸூதிபிந்நாம் ப்ரதியந்தி சுக்திம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கத்தில் சயனித்துள்ள பெரியபெருமாள் அழகான கடல் போன்றுள்ளான். அந்தக் கடலின் அருகில் காணப்படும் முத்துக்களின் கூட்டங்களால் நீ ப்ரகாசிக்கிறாய். இப்படியாக உள்ள உன்னைக் காணும்போது, ப்ரசவம் காரணமாகப் பிளந்த முத்துச்சிப்பி போன்று உள்ளாய்.