Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 625)

Paththati 18 - முக்தா பத்ததி

அவைமி பாதாவநி மௌக்திகாநாம் கீர்ணாம் உதக்ரை: கிரண ப்ரரோஹை: யாத்ரா உத்ஸவார்த்தம் விஹிதாம் முராரே: அபங்குராம் அங்குரபாலிகாம் த்வாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய முத்துக்களின் ஒளியானது மேல் முகமாய் எழுந்து நிற்கிறது. இதனைக் காணும்போது, ஸ்ரீரங்கநாதனின் உற்சவ காலங்களில் உண்டாக்கப்படும் உறுதியான நவதானிய முளைகள் கொண்ட பாலிகைகள் போன்று நீ உள்ளாய்.