Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 624)
Paththati 18 - முக்தா பத்ததி
ஸமாச்ரிதாநாம் அநகாம் விசுத்திம் த்ராஸ வ்யபாயம் ச விதந்வதீ த்வம் ஸாயுஜ்யம் ஆபாதயஸி ஸ்வகீயை: முக்தாபலை: மாதவ பாதுகே ந:
ஸ்ரீரங்கநாச்சியாரைத் தரித்த ஸ்ரீ ரங்கநாதனின் பாதுகையே! உன்னையே அண்டியபடி நிற்கின்ற எங்களுக்கு, பாவங்களின் தொடர்பு இல்லாத தன்மையையும் (வெண்மை), பயம் இல்லாத தன்மையையும் நீ ஏற்படுத்துகிறாய். இதன் மூலம் உன்னுடைய முத்துக்கள் போன்றே எங்களையும் நீ மாற்றி, இன்பமாக இருக்கும்படிச் செய்கிறாய்.