Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 623)

Paththati 18 - முக்தா பத்ததி

முகுந்தபாதாவநி மௌக்திகை: தே ஜ்யோத்ஸ்நாமயம் விச்வம் இதம் திவாபி வைமாநிகாநாம் ந பஜந்தி யேந வ்யகோசதாம் அஞ்ஜலி பத்மகோசா:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்ட முத்துக்களின் ஒளி காரணமாக, இந்த உலகத்தின் பகல் நேரத்திலும் சந்த்ரன் உள்ளது போன்றே தோற்றம் உள்ளது. இதனை எப்படி உணர முடிகிறது என்றால் - தேவர்களின் கைகுவித்தல் என்ற தாமரை மொட்டுக்கள், மலராமலேயே உள்ளதன் மூலம் அறியலாம் (அதாவது, தேவர்கள் பாதுகையை நோக்கிக் குவித்த கையை எடுப்பதே இல்லை, எப்போதும் அஞ்ஜலி முத்திரையில் உள்ளனர்).