Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 622)

Paththati 18 - முக்தா பத்ததி

ரங்கேசபாத ப்ரதிபந்ந போகாம் ரத்நாநு வித்தைர் மஹிதாம் சிரோபி: முக்தா அவதாதாம் மணிபாதுகே த்வாம் மூர்த்திம் புஜங்காதிபதே ப்ரதீம:

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய திருவடியின் மென்மையை நீ அனுபவித்தபடி சுகமாக உள்ளாய். இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட க்ரீடங்களை உடைய தேவர்களால் எப்போதும் கொண்டாடப்பட்டபடி உள்ளாய். உன்னில் பதிக்கப்பட்ட முத்துக்களின் ஒளி காரணமாக வெண்மையாகவும் உள்ளாய். இப்படியாக உன்னைக் காணும்போது, நாகங்கள் அனைத்திற்கும் அரசனாகிய ஆதிசேஷனின் திருமேனி என்றே எண்ணுகிறோம்.