Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 621)
Paththati 18 - முக்தா பத்ததி
பரிஷ்க்ருதா மௌக்திக ரச்மிஜாலை: பதஸ்ய கோப்த்ரீ பவதீ முராரே: பவதீ அநேகோர்மி ஸமாகுலாநாம் பும்ஸாம் தம: ஸாகர போதபாத்ரீ
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றியபடி உள்ள நீ, உனது முத்துக்களின் ஒளி என்னும் கயிறு மூலம் கட்டப்பட்டவள் போன்று உள்ளாய். எல்லையற்ற துன்ப அலைகளால் வருந்தும் பக்தர்களுக்கு, அந்த ஸம்ஸாரக்கடலில் இருந்து கரையேற உதவும் கப்பல் போன்று நீ உள்ளாய்.
இங்கு “எல்லையற்ற துன்ப அலைகள்” என்பது பசி, தாகம், துக்கம், அறியாமை, வயோதிகம், மரணம் என்ற ஆறும் ஆகும்.