Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 620)

Paththati 18 - முக்தா பத்ததி

முக்தா மயூகைர் நியுதம் த்வதீயை: ஆபூரயிஷ்யந் அவதம்ஸ சந்த்ரம் பிபர்தி ரங்கேச்வர பாதரக்ஷே தேவோ மஹாந் தர்சித ஸந்நதி: த்வாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தன்னுடைய தலையில் சந்த்ரனை ஆபரணமாக அணித்த சிவன், அந்தச் சந்த்ரனின் வெண்மையை முழுமையாக்கும் பொருட்டு, உன்னை வணங்கியபடி உள்ளான். உனது முத்துக்களின் வெண்மையான ஒளி மூலம், சிவனின் தலையில் உள்ள அந்தச் சந்திரன் முழுமை அடைகிறது.