Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 619)
Paththati 18 - முக்தா பத்ததி
யே பஜந்தி பவதீம் தவைவ தே மௌக்திக த்யுதி விகல்பகங்கயா வர்த்தயந்தி மதுவைரி பாதுகே மௌளி சந்த்ர சகலஸ்ய சந்த்ரிகாம்
மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! யார் உன்னை எப்போதும் ஆராதித்தபடி உள்ளனரோ, அவர்கள் தங்கள் தலைகளில் உன்னுடைய முத்துக்களின் வெண்மையை, கங்கையைத் தலையில் ஏந்தியது போன்று நிற்கிறார்கள். இப்படியாக அவர்கள் தலையில் கங்கையும், போலியாக ஒரு சந்த்ரனும் உள்ளதாகத் தோன்றுகிறது (அதாவது அவர்கள் சிவன் பட்டம் பெறுகின்றனர்).