Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 617)
Paththati 18 - முக்தா பத்ததி
தவ ரங்க சந்த்ர தபநீய பாதுகே விமலா ஸமுத்வஹதி மௌக்திகாவளி: சரணாரவிந்த நகசந்த்ர மண்டல ப்ரணய உபயாத நவ தாரக ருசிம்
ஸ்ரீரங்க விமானத்தில் சந்திரன் போன்று விளங்கும் ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்கள் சந்திரன் போன்று உள்ளன. அந்த சந்த்ர மண்டலத்தின் மீது மிகவும் ப்ரியத்துடன் வந்து நிற்கும் புதிய நக்ஷத்ரங்கள் போன்று வெண்மையான உனது முத்துக்களின் வரிசை காணப்பட்டது.