Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 616)
Paththati 18 - முக்தா பத்ததி
ஸமதாம் உபைதி வபுஷாபி ஸதா பவதீய மௌத்திக மஹ: சுரிதா ஹரிபாதுகே ஹரிபத: உத்பவயா கநகாபகா ஸுரபுராபகயா
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய வெண்முத்துக்களுடன் எப்போதும் காவேரி கலந்துள்ளது. இதனால் வெண்மையாகக் காணப்படும் காவேரி, ஸ்ரீரங்கநாதனின் திருவடியில் இருந்து வெளிப்பட்ட கங்கையை, தனது நிறத்திலும் ஒத்துள்ளது.