Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 615)

Paththati 18 - முக்தா பத்ததி

நிஹிதா நவ மௌத்திகாவளி: த்வாம் அபித: காஞ்சந பாதுகே முராரே: நக சந்த்ரமஸாம் பத ஆச்ரிதாநாம் ப்ரதிமா சந்த்ர பரம்பரேவ பாதி

தங்கமயமான பாதுகையே! உன்னுடைய அனைத்துப் பக்கங்களிலும் வெண்மையான முத்துக்கள் வரிசையாக இழைக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையைக் காணும்போது, ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் என்ற ஆகாயத்தை அடைந்துள்ள அவனது திருவடி நகங்கள் என்னும் சந்திரன்களின் ப்ரதிபிம்பம் போன்று உள்ளது.