Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 614)

Paththati 18 - முக்தா பத்ததி

அதி விஷ்ணு பதம் பரிஸ்புரந்தீ தவ முக்தாமணி நிர்மல ப்ரகாசா பரிபுஷ்யஸி மங்களாநி பும்ஸாம் ப்ரதிபத் சந்த்ரகலா இவ பாதுகே த்வம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் உள்ள நீ, உன்னில் பதிக்கப்பட்ட முத்துக்களின் ஒளியினால் வெண்மையாகக் காட்சி அளிக்கிறாய். இப்படியாக உள்ள நீ, ப்ரதமையில் உதிக்கும் சந்திரன் போன்று, அனைத்து உயிர்களுக்கும் நன்மை அளித்தபடி இருக்கிறாய் (ப்ரதமை என்பது பௌர்ணமிக்கு மறுநாள் ஆகும். அந்த நாளில் சந்த்ரன் பிறையாக இருக்கும். சந்த்ரனின் பிறையைக் கண்டால் நன்மை உண்டாகும்).