Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 613)

Paththati 18 - முக்தா பத்ததி

சரணாகத ஸஸ்ய மாலிநீ இயம் தவ முக்தாமணி ரச்மி நிர்ஜ்ஜரௌகை: நநு ரங்கதுரீண பாதரக்ஷே ஜகதீ நித்யம் அதைவ மாத்ருகா அபூத்

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! இந்த உலகம், ஸ்ரீரங்கநாதனே கதி என்றபடி உள்ள ப்ரபன்னர்களைப் பயிர்களாகக் கொண்டுள்ளது. உனது முத்துக்களின் ஒளியானது, மலை அருவிகளின் ப்ரவாஹங்களுடன் ஓடி வந்து இந்தப் பயிர்களில் பாய்கிறது. ஆக இந்தப் பூமி மழையை எதிர்பாராமல் உள்ளதாயிற்று.