Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 611)

Paththati 18 - முக்தா பத்ததி

பத்தாநாம் யத்ர நித்யாநாம் முக்தாநாம் ஈச்வரஸ்ய ச ப்ரத்யக்ஷம் சேஷ சேஷித்வம் ஸா மே ஸித்த்யது பாதுகா

எந்த ஒரு பாதுகையில் இழைக்கப்பட்டுள்ள அழிவற்ற முத்துக்களின் சேஷத்வமும் (அடிமைத்தன்மையும்), எந்த ஒரு பாதுகையின் மீது எப்போதும் எழுந்தருளியுள்ள ஸ்ரீரங்கநாதனுக்கு சேஷித்வமும் (எஜமானத்தன்மை) வெளிப்படுகிறதோ, அந்தப் பாதுகை எனக்குக் கைக்கூட வேண்டும்.