Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 610)

Paththati 17 - பத்மராக பத்ததி

அருணமய: தவ ஏதே ஹரி பத ராகேண லப்த மஹிமாந: கமயந்தி சரண ரக்ஷே த்யுமணிகணம் ஜ்யோதிரிங்கணதாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது பத்மராகக்கற்கள், ஸ்ரீரங்கநாதனுடைய திருவடித் தாமரைகளின் சிவந்த ஒளியைப் பெறுகின்றன. இதனால் அவை, மற்ற சூரியன்கள் அனைத்தையும், ஒளி குறைந்த, மின்மினிப்பூச்சிகள் போன்று மாற்றி விடுகின்றன.