Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 609)
Paththati 17 - பத்மராக பத்ததி
லாக்ஷா லக்ஷ்மீம் அதரரூசகே ரங்கிண: பாதரக்ஷே வக்த்ர அம்போஜ மதபரிணதிம் பத்மராக த்யுதிஸ்தே கர்ண உபாந்தே கிஸலய ருசிம் தேவி ஸேவாநதாநாம் ஸீமந்தே ச த்ரிதச ஸுத்ருசாம் ஸௌதி ஸிந்தூர சோபாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! உன்னைத் தேவலோகப் பெண்கள் வந்து வணங்குகின்றனர். அப்போது உனது பத்மராகக்கற்களின் சிவந்த ஒளியானது – அவர்கள் உதடுகளில் செம்பஞ்சுக் குழம்பு தடவிய அழகையும், தாமரை போன்ற முகங்களின் கள் குடித்தது போன்ற சிவந்த தன்மையையும், காதின் அருகில் தளிர்களின் சிவப்பையும், தலை வகுட்டில் குங்குமத்தையும் சேர்த்து விடுகிறது.