Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 608)
Paththati 17 - பத்மராக பத்ததி
ப்ரசுர நிகம் கந்தா: பாதுகே ரங்கபர்த்து: பதகமல ஸம்ருத்திம் ப்ரத்யஹம் பாவயந்த: தததி சகலயந்தோ காடமந்த: தமிஸ்ரம் ஸமுசிதம் அருணத்வம் தாவகா: பத்மராகா:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய பத்மராகக் கற்களின் சிவந்த ஒளியானது வேதவாசனையுடன் உள்ளது; ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளை அன்றாடம் மலரும்படிச் செய்கின்றது; அறியாமை என்ற இருளை நீக்குவதாக உள்ளது. இப்படியாக உனது பத்மராகக்கற்கள், சூரியனின் தன்மையை கொண்டபடி உள்ளன.