Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 607)
Paththati 17 - பத்மராக பத்ததி
அயம் அநிதர போகாந் ரஞ்ஜயந் வீதராகாந் அருணமணி கணாநாம் தாவகாநாம் ப்ரகாச: மதுரிபு பதரக்ஷே மங்க்ஷு ஜாஜ்வல்யமாந: சலபயதி ஜநாநாம் சாச்வதம் பாபராசிம்
மது என்னும் அரக்கனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! வேறு எதன் மீதும் ஆசை கொள்ளாமல், உன் மீதும் ஸ்ரீரங்கநாதன் மீதும் மட்டுமே ஆசை கொண்டவர்களை உனது பத்மராகக் கற்களின் சிவந்த ஒளியானது, மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியபடி உள்ளது. இதே ஒளியானது, பாவம் செய்பவர்களின் பாவக்குவியலை விளக்கைத் தேடிவரும் விட்டில்பூச்சி போன்று எரிப்பதாகவும் உள்ளது.