Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 606)
Paththati 17 - பத்மராக பத்ததி
ப்ரதி விஹரணம் ஏதே பாதுகே ரங்கபர்த்து: பதகமல ஸகந்தா: பத்மராகா: த்வதீயா: தருண தபந மைத்ரீம் உத்வஹத்பி: மயூகை: ஸ்தல கமல விபூதிம் ஸ்தாபயந்தி அவ்யவஸ்தாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய திருவடித் தாமரைகளின் சிவந்த ஒளியானது, பால சூரியன் போன்று உள்ளது. உனது பத்மராகக் கற்களின் சிவந்த ஒளியானது, ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்யும்போது, அனைத்து இடங்களிலும் அந்தச் சிவந்த ஒளியைத் தாமரை போன்று தரையில் பதித்தபடியே சென்று விடுகிறது. ஆக, திருவடியின் ஒளி என்னும் சூரிய ஒளி மூலம், வழி எங்கும் தாமரை மலர்ந்தது போன்று உள்து.