Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 605)

Paththati 17 - பத்மராக பத்ததி

ஹரிபத ருசிராணாம் பாதுகே தாவகாநாம் அருணமணி கணாநாம் நூநம் அர்த்தேந்து மௌளி: ப்ரணதி ஸமய லக்நாம் வாஸநாம் ஏவ தத்தே களம கணிச காந்தி ஸ்பர்த்தநீபி: ஜடாபி:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பிறைச்சந்த்ரனைத் தலையில் தரித்த சிவன், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் வந்து வணங்குறான். அப்போது உனது பத்மராகக் கற்களின் ஒளியானது அவனது தலையில் உள்ள சடைகளில் விழுகிறது. இதனால் அவனது சடைமுடிகள் பொன்மயமான நெற்கதிர்களின் ஒளு போன்று ஒளி வீசுகின்றன. இப்படியாக உனது சிவந்த கற்களின் ஒளியையே அவன் தனது சடையில் கொண்டுள்ளான் போலும்.