Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 604)

Paththati 17 - பத்மராக பத்ததி

சரணம் உபகதாநாம் சர்வரீம் மோஹரூபாம் சமயிதும் உதயஸ்தாந் மந்மஹே பாலஸூர்யாந் பதஸரஸிஜ யோகாத் ரங்கநாதஸ்ய பூய: பரிணமத் அருணிம்ந: பாதுகே பத்மராகாந்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளின் சிவந்த நிறம் காரணமாக உனது பத்மராகக்கற்கள் மேலும் சிவந்து காணப்படுகின்றன. இவற்றைக் காணும்போது, ஸ்ரீரங்கநாதனின் திருவடிளைச் சரணம் அடைந்தவர்களின் அஜ்ஞானம் என்ற இருளைப் போக்க வந்த இளம் சூரியன் போன்றே உள்ளது.