Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 603)
Paththati 17 - பத்மராக பத்ததி
ரங்காதிராஜ பதரக்ஷிணி பிப்ரத: த்வாம் கங்கா தரங்க விமலே கிரிசஸ்ய மௌளௌ ஸம்வர்த்தயந்தி மஹஸா தவ பத்மராகா: சைலாத்மஜா சரண யாவக பங்கலக்ஷ்மீம்
ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னைச் சிவன் தனது தலையில் வைத்துக் கொள்கிறான். அப்போது, அவனது தலையில் உள்ள தூய்மையான கங்கை நீரில் உனது பத்மராகக் கற்களின் சிவந்த ஒளி பரவுகின்றது. இதனைக் காணும்போது, ஹிமவத் என்னும் மலையின் மகளான பார்வதியின் கால்களில் பூசப்பட்ட செம்பஞ்சுக் குழம்பானது, சிவனின் தலையில் உள்ளதைப் போன்ற தோற்றம் அளிக்கிறது.