Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 602)

Paththati 17 - பத்மராக பத்ததி

ரங்கேசிது: விஹரதோ மணிபாதரக்ஷே ரத்யாந்தரே ஸுமநஸ: பரிகீர்யமாணா: த்வத் பத்மராக கிரணாச்சுரணாத் பஜந்தே ஸந்த்யாதப அந்தரித தாரக பங்க்தி லக்ஷ்மீம்

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்கின்ற காலத்தில், அவன் மீது மலர்களை வாரி இறைக்கின்றனர். அந்த மலர்கள் மீது உனது பத்மராகக் கற்களின் ஒளியானது விழுகிறது. இதனைக் காணும்போது, மாலை நேரத்து வெய்யிலுடன் கூடிய நக்ஷத்திரங்கள் போன்று அந்த மலர்கள் காணப்படுகின்றன.