Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 601)
Paththati 17 - பத்மராக பத்ததி
லீலா க்ருஹ அந்தர விஹாரிணி ரங்கநாதே லாக்ஷாரஸை: அருண ரத்ந மயூக லக்ஷ்யை: ப்ராயேண ரஞ்ஜயதி பாதஸரோஜ யுக்மம் ஸைரந்த்ரிகேவ பவதீ மணிபாதரக்ஷே
இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் இன்பமாக விளையாடி மகிழ்வதற்காக உள்ள அறையில், எளிதாகப் புகும் தாதிப்பெண் போன்று நீ உல்லாஸமாகச் செல்கிறாய். உன்னுடைய பத்மராகக் கற்களின் சிவந்த ஒளி மூலமாக, அவனது இரண்டு திருவடிகளுக்கும் செம்பஞ்சுக் குழம்பைப் பூசச் செல்கிறாய் போலும்.