Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 600)

Paththati 17 - பத்மராக பத்ததி

பாதாவநி ப்ரஸ்ருமரஸ்ய கலே: யுகஸ்ய ப்ராயேண ஸம்ப்ரதி நிவாரயிதும் ப்ரவேசம் ஸ்ரீரங்கஸீம்நி தவ சோண மணிப்ரஸூத: ப்ராகாரம் அக்நிமயம் ஆரபதே ப்ரகாச:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! இந்தப் பூமி எங்கும் கலிபுருஷன் பரவியபடி வருகிறான். ஆனால், அவன் ஸ்ரீரங்கத்தின் எல்லைக்குள் புகாதபடி உனது பத்மராகக் கற்களின் சிவந்த ஒளியானது, நெருப்பால் ஆகிய ஒரு கோட்டையை உண்டாக்குகிறது போலும்.