Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 598)
Paththati 17 - பத்மராக பத்ததி
ஸ்தாநே தவ அச்யுத பதாவநி பத்மராகா: தேஜோமயா: ப்ரசமயந்தி தமோ மதீயம் சித்ரம் தத் ஏதத் இஹ யத் ஜநயந்தி நித்யம் ராகாத்மகேந மஹஸா ரஜஸோ நிவ்ருத்திம்
அடியார்களை நழுவவிடாத ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! மிகவும் பிரகாசமாக உள்ள உனது பத்மராகக் கற்களின் ஒளி மூலமாக, எனது தமோ குணம் என்ற இருள் அகன்றுவிடுகிறது. இது பொருத்தமான நிகழ்வே ஆகும். ஆனால் விஷயப் பற்றுதல்கள் என்னும் சிவந்த நிறம் கொண்ட ரஜோ குணத்தை, உனது பத்மராகக் கற்களின் சிவந்த ஒளியே நீக்குகின்றனவே! இது மிகவும் வியப்பே ஆகும்.
பத்மராகத்தின் ஒளியால் இருண்ட தாமஸ குணம் நீங்குவதாகக் கூறுகிறார். இது நியாயமே ஆகும். பாதுகையின் பத்மராகக் கற்களின் வெளிச்சம் ராகமாக, அதாவது சிவப்பாக உள்ளது. இது சிவந்த நிறம் கொண்ட ரஜோ குணத்தை நீங்குகிறதே என்று வியக்கிறார்.