Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 597)
Paththati 17 - பத்மராக பத்ததி
ஆமுஞ்சதாம் அருண யாவக பங்க லக்ஷ்மீம் சோணாச்மநாம் தவ பதாவநி சாந்தி யோகாத் பத்மாஸஹாய பத பத்ம நகா: ச்ரயந்தே ஸந்த்யா அநுரஞ்ஜித ஸுதாகர பிம்ப சோபாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளின் நகங்கள் அனைத்தும், செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்டது போன்ற அழகை, உனது பத்மராகக் கற்களின் சிவந்த ஒளி மூலம் அடைகின்றன. அவற்றைக் காணும்போது ஸந்த்யா கால நேரத்தில் சிவந்துள்ள வானத்தில் காணப்படும் சந்த்ரன் போன்று உள்ளன.