Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 596)
Paththati 17 - பத்மராக பத்ததி
ஸம்பத்யதே தவ பாதாவநி பத்மராகை: ப்ரஸ்தாந மாங்களிக ஹோம ஹுதாசநச்ரீ: க்ஷிராஹுதி: பவதி யத்ர விகல்பகங்கா ரங்கேச்வரஸ்ய ருசிரா நகரச்மி தாரா
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் உற்சவ காலங்களில் யாக சாலையில் இயற்றப்படும் ஹோமத்தில் உள்ள மங்களகரமான அக்னியோ என்னும்படி உனது பத்மராகக் கற்கள் தோன்றுகிறன. அப்போது அங்கு எழுந்தருளும் ஸ்ரீரங்கநாதனுடைய திருவடி நகங்கள், கங்கை போன்று வெண்மையாகக் காணப்படுகின்றன. இந்த வெண்மையைக் காணும்போது, அந்த ஹோமத்தில் இடப்படும் பால் போன்று உள்ளது.