Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 595)

Paththati 17 - பத்மராக பத்ததி

ப்ரத்யங்கயஸ்ய ஹவிஷ: ப்ரணவேன தேவி ப்ரக்ஷேபணாய பரமார்த்தவிதாம் முநீநாம் ப்ராஜ்யாம் முகுந்த சரணாவநி பத்மராகை: பர்யாய பாவக சிகாம் பவதீம் ப்ரதீம:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகா தேவியே! பத்மராகங்களுடன் கூடிய நீ, ஒரு விதமான அக்னியின் ஜ்வாலை போன்றே உள்ளாய். இந்த அக்னியில், ப்ரணவத்தை உச்சரித்தபடி, முனிவர்கள் தங்கள் ஆத்மஸ்வரூபம் என்ற அவிர்பாகத்தை அளிக்கின்றனர்.