Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 594)
Paththati 17 - பத்மராக பத்ததி
தேவஸ்ய ரங்கரஸிகஸ்ய விஹார ஹேதோ: ஆத்மாநம் அங்க்ரி கமலே விநிவேத்ய பூர்வம் ப்ராயோ நிவேதயஸி சோண மணிப்ரகாசை: ப்ரத்யூஷ பதம் கலிகாம் பதரக்ஷிணி த்வம்
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கத்தின் மீது மிகவும் ஆசை கொண்டவனான ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்தின் பொருட்டு, அவனது திருவடித் தாமரைகளில், நீ உன்னை முதலில் சமர்ப்பணம் செய்து கொள்கிறாய். அதன் பின்னர் உனது சிவந்த பத்மராக்க் கற்களின் ஒளி மூலம், காலை நேரத்து தாமரை மலர்களைச் சமர்ப்பிக்கிறாய் போலும்.
இங்கு கூத்தாடும் ஒரு பெண், சபையில் உள்ள தலைவனை வணங்கி, அவனுக்கு மலர்களை வாரி இறைத்தல் என்பது கூறப்படுகிறது.