Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 593)

Paththati 17 - பத்மராக பத்ததி

நித்யம் நிஜா லோகபதம் கதாநாம் ச்ரேயோ திசந்தீம் ச்ரித பத்மராகாம் மஹீயஸிம் மாதவ பாதரக்ஷே மந்யாமஹே மங்கள தேவதாம் த்வாம்

ஸ்ரீரங்கநாச்சியாரைத் தரித்த பெரியபெருமாளின் பாதுகையே! உன்னுடைய ப்ரகாசம் என்னும் வழியில் செல்பவர்களுக்கு நீ மிகுந்த நன்மையை அளித்தபடி உள்ளாய். பத்மராகக் கற்களின் சிவந்த ஒளியால் நீ தாமரை மலரில் விருப்பம் உடையவளாகத் தோன்றுகிறாய். மிகவும் மேன்மையுடன் விளங்குகிறாய். இப்படியாக உள்ள உன்னை அனைத்துவிதமான மங்களங்களுக்கும் தேவதையான மஹாலக்ஷ்மி என்றே எண்ணுகிறோம் (திருவடியில் உள்ளதால் பாதுகையும் மஹாலக்ஷ்மியும் ஒன்றே எனக் கூறுகிறார்).