Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 592)
Paththati 17 - பத்மராக பத்ததி
த்வயைவ பாதாவநி சோண ரத்நை: பாலாதபம் தூநம் உதீரயந்த்யா பத்மாபதே: பாததல ப்ரரூடம் ரேகாம்புஜம் நித்யம் அபூத் அநித்ரம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது பத்மராகக்கற்களின் சிவந்த ஒளியானது இளம் வெய்யில் போன்று காணப்படுகிறது. இந்த வெய்யிலின் காரணமாகவே, ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில், ரேகை வடிவில் உள்ள தாமரையானது, எப்போது மூடாமல், மலர்ந்தே காணப்படுகிறது.