Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 591)
Paththati 17 - பத்மராக பத்ததி
அர்ச்சிஷ்மதீ காஞ்சந பாதரக்ஷே ப்ரஸ்தௌதி தே பாடலரத்ந பங்க்தி: ரேகா ரதாங்கஸ்ய மஹ: ப்ரபஞ்சம் ரங்கேச பாதாம்புஜ மத்ய பாஜ:
ஸ்ரீரங்கநாதனின் பொன்மயமான பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய தாமரை மலர் போன்ற அழகிய திருவடியின் நடுவில், ரேகை வடிவத்தில் சக்கரம் உள்ளது. உன்னுடைய பத்மராகக் கற்களின் சிவந்த ஒளியானது, அந்தச் சக்கரத்தின் ஒளியைப் போன்று காணப்படுகிறது.