Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 590)

Paththati 17 - பத்மராக பத்ததி

பதேந விச்வம் மணிபாதரக்ஷே பத்ந்யா ஸமம் பாலயதோ முராரே: யச: பயோதௌ பரிகல்பயந்தி ப்ரவாள சோபாம் தவ பத்மராகா:

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! தனது திருவடிகள் மற்றும் ஸ்ரீரங்கநாச்சியார் ஆகிய துணையுடன், ஸ்ரீரங்கநாதன் இந்த உலகத்தைக் காப்பாற்றுகிறான். அவனது கீர்த்தியானது பெரும் ஸமுத்திரம் போன்று உள்ளது. உனது பத்மராகக் கற்கள், இந்த ஸமுத்திரத்தை மேலும் அழகுபடுத்தும் பவழங்கள் போன்று உள்ளன.