Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 589)
Paththati 17 - பத்மராக பத்ததி
நிஸர்க ஸித்தம் மணிபாதரக்ஷே தேவஸ்ய ரங்காவஸத ப்ரியஸ்ய பாலார்க்கவர்ணா: பத பத்மராகம் த்வத் பத்மராகா: புநருக்தயந்தி
இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய பத்மராகக் கற்களின் ஒளியானது இளம் சூரியனின் நிறம் போன்று சிவந்துள்ளது. ஸ்ரீரங்கத்தில் மிகவும் சந்தோஷத்துடன் வாசம் செய்யும் நம்பெருமாளின் திருவடித்தாமரைகளின் அழகை இந்தச் சூரிய ஒளி மேலும் அதிகப்படுத்துகிறது.