Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 588)

Paththati 17 - பத்மராக பத்ததி

அவாப்ய பாதாவநி ரங்கபர்த்து: பாதாம்புஜே பல்லவ ஸம்ஸ்தராபம் த்வத் பத்மராக த்யுதயோ பஜந்தே காலாநலத்வம் கலுஷாம்புதே: ந:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னில் பதிக்கப்பட்ட பத்மராகக் கற்களின் சிவந்த ஒளியானது, ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் மென்மையான தளிர்கள் போன்று காணப்படுகின்றன. ஆனால் அவையே எங்களது பாவம் என்ற பெரும் ஸமுத்திரத்தை வற்றச் செய்கின்ற ப்ரளய காலத்து அக்னி போன்று உள்ளது.