Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 587)

Paththati 17 - பத்மராக பத்ததி

அவைமி தோஷாபகமஸ்ய ஹேதும் தம: அபஹாம் ஸம்ப்ருத பத்மராகாம் அசேஷ வந்த்யாம் மணிபாதுகே த்வாம் ரங்கேச ஸூர்யோதய பூர்வஸந்த்யாம்

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! அனைத்து விதமான பாவங்கள் என்னும் இரவுப் பொழுது போக்குவதாகவும், அந்தப் பாவங்களுக்குக் காரணமான தமோ குணம் என்னும் இருள் நீங்குவதாகவும், பத்மராகக் கற்கள் என்னும் தாமரை மலர்வதாகவும், ஸ்ரீரங்கநாதன் என்னும் சூரியன் உதிப்பதாகவும் நான் காண்கிறேன். இவற்றுக்குக் காரணமாக உள்ள உன்னை, நான் காலை வேளையாகவே எண்ணுகிறேன்.