Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 586)
Paththati 17 - பத்மராக பத்ததி
பச்யந்தி ரங்கேச்வர பாதுகே த்வாம் பௌராங்கநா: ஸ்பர்சித ராகபந்தாம் ச்ருங்காரயோநே: ஜ்வலநஸ்ய தீப்தை: அங்கார ஜாலைரிவ பத்மராகை:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கத்துப் பெண்கள் உன்னில் பதிக்கப்பட்ட பத்மராகக் கற்கள் ஏற்படுத்தும் சிவந்த ஒளியைக் காண்கின்றனர். உடனே அவர்கள் தங்கள் மனதில், “நம்மை வாட்டும் மன்மதனுடைய அக்னியின் தணல்கள் இவையோ?”, என்று எண்ணுகின்றனர்.