Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 585)

Paththati 17 - பத்மராக பத்ததி

ப்ரதியந்தி ரங்கபதி பாதுகே ஜநா: தவ பத்மராகமணி ரச்மி ஸந்ததிம் அபிஜக்முஷாம் த்வத் அநுபாவ கண்டிதாத் அக ஸஞ்சயத் விகளிதாம் அஸ்ருக்ச்சடாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை அடைந்தவர்களின் பாவக் கூட்டங்களை, உனது பெருமை மற்றும் மேன்மையால் வெட்டுகிறாய். அந்த கூட்டத்தின் இரத்தப்பெருக்கு போன்று உன்னில் பதிக்கப்பட்ட பத்மராகக் கற்களின் ஒளியானது உள்ளது.