Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 583)

Paththati 17 - பத்மராக பத்ததி

பத பல்லவ ஸங்கிபி: ப்ரதீப்தை: அதிகோல்லாஸிபி: அம்ப பத்மராகை: அநலே சயநம் க்வசிந் முராரே: அவிஸம்வாதயஸீவ பாதுகே த்வம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் துளிர்கள் போன்று மென்மையாகவும், சிவந்தும் உள்ளன. அதில் நீ சேர்ந்து காணப்படுகிறாய். உன்னில் பதிக்கப்பட்ட பத்மராகக் கற்கள் காரணமாக, அவனது திருவடிகள் மேலும் சிவந்த நெருப்பு போன்று காணப்படுகின்றன. இதனை காணும்போது, பாஞ்சராத்ர ஆகமத்தில் எம்பெருமான் நெருப்பால் ஆன படுக்கையில் சயனித்துள்ளான் என்பதைக் காண்பிப்பதாக உள்ளது.