Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 582)
Paththati 17 - பத்மராக பத்ததி
அதிவாங்மநஸாம் விசிந்த்ய சௌரே: பதரக்ஷே பதபத்ம ஸௌகுமார்யம் பரிபுஷ்யஸி பத்மராக பாஸா பதவீம் ஆஹித பல்லவாம் இவ த்வாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளின் மென்மை என்பது சொற்களாலும், மனதாலும் நினைக்க இயலாதபடி உள்ளன. இப்படிப்பட்ட மென்மையான திருவடிகள் ஸஞ்சாரம் செய்யும்போது நீ செய்வது என்ன? உனது பத்மராகக் கற்களின் சிவந்த ஒளி மூலமாக, ஸ்ரீரங்கநாதன் செல்கின்ற வழி முழுவதும் தளிர்களால் ஆகிய விரிப்பை உண்டாக்குகிறாய் போலும்.