Sri Paduka Sahasram - Paththati 17 - பத்மராக பத்ததி (ச்லோகம் 581)
Paththati 17 - பத்மராக பத்ததி
ப்ரபத்யே ரங்கநாதஸ்ய பாதுகாம் பத்மராகிணீம் பதைக நியதாம் தஸ்ய பத்ம வாஸாம் இவ அபராம்
பத்மராகக்கற்கள் கொண்டவளும், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை விட்டு எப்போதும் அகலாமல் உள்ள மற்றோரு மஹாலக்ஷ்மி போன்றவளும் ஆகிய ஸ்ரீரங்கநாதனின் பாதுகைப் பிராட்டியைச் சரணம் அடைகிறேன்.